Category Archives: COURSES

திறந்தநிலை பல்கலை.யில் பிஎச்.டி.: விண்ணப்பிக்க டிச. 29 கடைசி

 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும்.

நர்சிங் மாணவர் சேர்க்கை: காலஅவகாசம் நீட்டிப்பு

நர்சிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசத்தை, டிச., 31ம் தேதி வரை நீட்டித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.

பி.எஸ்சி., நர்சிங், பி.பி.பி.எஸ்சி., நர்சிங், எம்.எஸ்சி., நர்சிங் ஆகிய அனைத்து படிப்புகளுக்கும் நவ., 30ம் தேதி வரை மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது, இந்தியன் நர்சிங் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, இக்காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்கலை விதிமுறைகளின்படி, பருவத்தேர்வுகளுக்கு முன் மாணவர்களின் வருகை பதிவு விதிமுறை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அழகப்பா பல்கலை. தொலைநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான தேர்வு வரும் டிச. 26 இல் நடைபெறவிருப்பதால், இதற்கு விண்ணப்பிக்கும் தேதி டிச. 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

 இப்பல்கலைக்கழகம்1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின்கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் தகவல்

மாணவிக்குப் பட்டம் வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் பதிவாளர் என்.ரவீந்திரநாத் தாகூர், துணைவேந்தர் எஸ்.தங்கசாமி, நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன்,

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலை: தொலைதூர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம், எம்.பி.ஏ, ஐ.டி. உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான அவகாசம் 31-12-2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் விண்ணப்பங்களை பெறவும், நேரடி சேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களை அனைத்து நாள்களிலும் அணுகலாம். தமிழ், ஆங்கிலவழி படிப்பும், நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையும் உண்டு. படிப்பு மையம் மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி மையத்தை 04144 – 238043, 238044, 238045, 238046, 238047 என்ற எண்களிலும், ddedirector2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்களை www.audde.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி

ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐசிடபிள்யூஏஐ என்பது மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்

ராணுவத்தில் டெக்னிக்கல் படிப்பு  

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவ அகாடமியில் (ஐ.எம்.ஏ.,) டெக்னிக்கல் கிராட்ஜூவேட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராணுவத்தில் டெக்னிக்கல் படிப்பு

 பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவ அகாடமியில் (ஐ.எம்.ஏ.,) டெக்னிக்கல் கிராட்ஜூவேட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சுவடியியல் பட்டயப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க டிச.10 கடைசி

தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு சேர்க்கைக்காக விண்ணப்பிக்க டிசம்பர் 10 கடைசி நாளாகும்.
இது தொடர்பான தமிழக அரசின் செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து, நூலாக்கம் செய்யும் வகையில் இந்த பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஓராண்டுக்கு 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.3,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ulakaththamizh.org  என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிசம்பர் 10 கடைசி நாளாகும்.
கல்வித் தகுதி: இந்தப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
பயிற்சிக்கான கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்படும். வகுப்புகள் 2019 ஜனவரி 2 ஆம் தேதி முதல் தொடங்கும்.
எழுத்துத் தேர்வு: இந்தப் படிப்புக்கான எழுத்துத் தேர்வு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு “இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத்தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-113′ என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 044-22542992, 22540087.

அஞ்சல்வழியில் படிக்கலாம் சமஸ்கிருதம்!

ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதம் தொடர்புடைய பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

பல்கலைக்கழகம்: இந்திய சமஸ்கிருத ஆணையத்தின் (Sanskrit Commission) 1957 ஆம் ஆண்டு பரிந்துரைப்படி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் 1961 ஆம் ஆண்டு கேந்திரிய சம்ஸ்கிருத வித்யாபீடம் (Kendriya Sanskrit Vidyapeetha Tirupati Society) எனும் சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

1971ஆம் ஆண்டில் இந்திய அரசின் கல்வித்துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்ட ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தன் (Rashtriya Sanskrit Sansthan) எனும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. இக்கல்வி நிறுவனம் 1987 ஆம் ஆண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழக (Deemed University) நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்புடைய இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்புடைய சில படிப்புகள் அஞ்சல் வழியிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

அஞ்சல்வழிப் படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் ஆறு மாத கால அளவிலான சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்பு (Certificate Course in Sanskrit), ஒரு வருட கால அளவிலான சமஸ்கிருதப் பட்டயப்படிப்பு (Diploma in Sanskrit) மற்றும் யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்பு (P.G. Diploma in Yoga Vijnan), இரண்டு வருட கால அளவிலான பிரக் சாஸ்திரி (Prak- Sastri), மூன்று வருட கால அளவிலான சாஸ்திரி (Sastri), மூன்று வருட கால அளவிலான கணினிப் பயன்பாடுடனான சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்பு  (B.A Sanskrit  Computer Application), இரண்டுவருட கால அளவிலான ஆச்சார்யா (Acharya) படிப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. மேற்காணும் படிப்புகளில் சாஸ்திரி படிப்பு இளநிலைப் பட்டப்படிப்புக்கும் (B.A), ஆச்சார்யா படிப்பு முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் (M.A) இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்புக்கு 13 வயது நிரம்பிய எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். சமஸ்கிருதப் பட்டயப்படிப்புக்கு இந்நிறுவனம் அல்லது புதுடெல்லியிலுள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான் வழங்கும் பிரக் சாஸ்திரி அல்லது +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிரக்- சாஸ்திரி படிப்பிற்கு 10 அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சாஸ்திரி மற்றும் சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்புக்கு (B.A Sanskrit) பிரக்  சாஸ்திரி அல்லது +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆச்சார்யா  படிப்புக்கு சாஸ்திரி அல்லது சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் அஞ்சல்வழியிலான படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை அஞ்சல்வழியில்பெற விரும்புவோர் வேண்டுதல் கடிதத்துடன், ‘The Registrar, Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati’ எனும் பெயருக்கு ரூ.200-க்கான வங்கி வரைவோலையினைப் பெற்று, அதன் பின்புறம் பெயர், சேர விரும்பும் படிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு ‘The Director, D.D.E., Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati – 517507, Andhra Pradesh’ எனும் முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

இப்பல்கலைக்கழகத்தின் http://rsvidyapeetha.ac.in என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பமெனில் நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணம் ரூ.200க்கான வங்கி வரைவோலையினைச் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.8.2017, அதன் பின்னர் 15.9.2017 வரை ரூ.100 தாமதக் கட்டணத்துடனும், 30.9.2017 வரை ரூ.200  தாமதக் கட்டணத்துடனும் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க முடியும்.

கல்விக் கட்டணம்: சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்புக்கு ரூ.1700, சமஸ்கிருதப் பட்டயப்படிப்புக்கு ரூ.2200, யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு ரூ.8700, எனக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரக் சாஸ்திரி படிப்புக்கு ரூ.3700, சாஸ்திரி படிப்புக்கு ரூ.4000 சாஸ்திரி (கணினி பயன்பாடு) ரூ.4200 ஆச்சார்யா படிப்புக்கு ரூ.4700 என்று ஆண்டுக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 40% வரை கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள் திருப்பதியிலுள்ள இப்பல்கலைக்கழக மையத்தில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்புகள் குறித்து மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது ‘Directorate of Distance Education, Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati – 517064, (A.P)’ எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது directorddersvp@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம். இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி அலுவலகத்தின் 0877-2287745 (அலுவலகம்), 0877-2287691 (இயக்குநர்) அல்லது 0877-2287649 தொலைதூரக்கல்வி அலுவலக நீட்சி (Ext) 256, 262 எனும் எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

ஆன்லைனில்’ ஆசிரியர் பயிற்சி: ‘கூல்’ எனப்படும் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டம் அறிமுகம் :     November 19, 2018

ஆசிரியர் பயிற்சியை, ‘ஆன் லைன்’ எனப்படும் இணையம் மூலம் பெறும் வகையில், ‘கூல்’ என பெயரிடப்பட்டு உள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதற்கான திட்டங்களை, ‘கைட்’ எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது, கூல்
எனப்படும், ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர் பயிற்சி பெறுவோர், 45 மணி நேர கம்ப்யூட்டர் பயிற்சியை பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந் நிலை யில், கூல் எனப்படும் ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்ய உள் ளோம். இந்த பயிற்சியில், ஆசிரியர்கள், மாணவர் கள், பொதுமக்களும் பங்கேற்கலாம். முதல்கட்ட மாக, ஆசிரியர்களுக் கான பயிற்சி வகுப்புகள், அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் சேருவதற்கு, 5,000ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.முதல்கட்டமாக, 2,500 பேருக்கு, ஆறு வார பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில், அடிப்படை கம்ப்யூட்டர் பயன்பாடு, படங்களை திருத்துவது, வீடியோவை திருத்துவது, மலையாளத்தில், ‘டைப் பிங்’ செய்வது, இன்டர்நெட் பயன்படுத்துவது,

கல்வியியல் தொடர்பான இணைய பக்கங் களை எப்படி பயன்படுத்துவது போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியை மேற்கொள் வோருக்கு, சான்றிதழ் அளிக்கப்படும். அடுத்த கட்டமாக, மாணவர் கள், பொதுமக்களுக்கான பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்

SASTRA- UNIVERSITY -B.Ed (Distance Mode) Application and Prospectus 2015 -2016

CLICK HERE

மீன் வள தொழில்நுட்ப படிப்புகள் தமிழ் வழியில்

CLICK HERE

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி

2014 – 2015 ஆம் ஆண்டிற்கான ஓலைச்சுவடிப் பட்டய வகுப்பு ( முழுநேரம் ) மாணவர் சேர்க்கை அறிவிப்பு

CLICK HERE

 

சென்னையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இலவச பயிற்சி

CLICK HERE

மருத்துவம் சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ படிப்புகள்

CLICK HERE

error: Content is protected !!