“வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும்’

நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது தொடர்பாக புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதன்மூலம் போதிய அளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது தெரியவரும் என்றும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் விவேக் தேவ்ராய் கூறினார்.
வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (என்எஸ்எஸ்ஓ) அறிக்கையில் தகவல் வெளியானதன் பேரில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விடியோ பதிவில் விவேக் தேவ்ராய் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது தொடர்பாக புதிதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டு, அதன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். நாட்டில் போதிய அளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது அதன் மூலமாகத் தெரியவரும்.
வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் நடத்தும் சூழல்கள் போன்றவை, ஒவ்வொரு மாநிலங்களைப் பொருத்ததாகும்.
கடந்த 2011}12 காலகட்டத்துக்குப் பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு வலுவான புள்ளி விவரங்களும் இல்லை. இந்தியாவில் தொழிலாளர் ஆற்றல் என்பது இன்றளவிலும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது. நிறுவனங்கள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படும் கணக்கெடுப்புத் தகவல்கள், தெளிவான புரிதலை அளிப்பதாக இல்லை.
வேலைகளின் தரமும், அதற்கு கிடைக்கும் ஊதியமும் தான் உண்மையான பிரச்னையே தவிர, வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அல்ல. மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட அளவிலான வேலைவாய்ப்புகளையே வழங்க இயலும். அதிகளவிலான வேலைவாய்ப்புகள் அரசு தவிர்த்து தனியார் மூலமாகவும் உருவாக்கப்படலாம். பிரதமர் மோடி அரசு, சுயதொழில் தொடங்குவது போன்றவற்றின் மூலமாக அதையே ஊக்குவிக்கிறது என்று விவேக் தேவ்ராய் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!