சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) சென்னை ஆணையரகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 06

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச வ.யதுவரம்பு இல்லை.

சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக அலுவலர் (பணியமைப்பு), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) கிண்டி, சென்னை – 32

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!