இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை

சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18

 பணி: அலுவலக உதவியாளர்

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் கோருபவர்களுக்கு நடைமுறையில் அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதவித்தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை – 600 008.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!