ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா பெரும்பாலும் செய்ல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படும் இரும்பு உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் வீடுகள் கட்டுமானம், இன்ஜினியரிங், பவர், ரயில்வே, பாதுகாப்புத்துறைக்கான இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தின் பொகாரோ மையத்தில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவுகளில் காலியாக இருக்கும் 275 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பிரிவில் டிரெய்னியில் 95ம், பாய்லரில் 10ம் காலியிடங்கள் உள்ளன. அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவில் டிரெய்னியில் 121ம், இதே பிரிவில் எஸ்.டி., பிரிவினருக்கு பிரத்யேகமாக 49 இடங்களும் காலியாக உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பிரிவுக்கு பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் பதவிக்கு பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும். சரியான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

பயிற்சிக் காலம்: முதல் பிரிவுக்கு இரண்டு ஆண்டுகளும், இரண்டாவது பிரிவுக்கு ஒரு ஆண்டும் புரோபேஷன் முறையில் பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 18.02.2019

விபரங்களுக்கு
www.sailcareers.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!