அண்ணா பல்கலை தேர்வு முறை: சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: அண்ணா பல்கலையின் புதிய தேர்வு முறையில், அரியர் தேர்வுக்கு சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. துணைவேந்தர் சுரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் விவேகானந்தன், பல்கலையின் பொறுப்பு பதிவாளர் குமார் உட்பட, நான்கு உறுப்பினர்கள்பங்கேற்றனர்.உயர்கல்வி செயலர்மங்கத்ராம் சர்மாபங்கேற்கவில்லை.பல்கலையின் செயல்பாடுகள், கல்லுாரிகளின் நிதி மற்றும் நிர்வாக விபரங்கள் விவாதிக்கப்பட்டன. பல்கலைக்கு புதிய பதிவாளரை நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டது.மேலும், 2017ல் அமல்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறைகளின் படி, அரியர் தேர்வு எழுதும் முறையில், சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டது.அதாவது, தற்போது படிக்கும் மாணவர்கள் மட்டும், தங்களுக்கு அரியர் பாடங்கள் இருந்தால், அந்த பாடங்களுக்கு அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சி பெறலாம். இதற்கு, ஏற்கனவே பல்கலையின் கல்வி வாரியம், கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!