மி.வா., உதவி பொறியாளர் 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை:மின் வாரியம் 325 உதவி பொறியாளர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை வரும் 12ம் தேதி துவக்குகிறது.

தமிழ்நாடு மின் வாரியம் முதல் முறையாக எழுத்து தேர்வு வாயிலாக 325 உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக டிசம்பர் 30ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் விபரத்தை மின் வாரியம் இம்மாதம் 4ல் வெளியிட்டது. அதில் தகுதி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 12ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: ‘எலக்ட்ரிகல்’ பிரிவில் 300; ‘சிவில்’ பிரிவில் 25 உதவி பொறியாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதிவாய்ந்த ‘கட் ஆப்’ மதிப்பெண் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பை வரும் 12 முதல் 13ம் தேதி வரை சென்னை அண்ணா சாலை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அழைப்பு கடிதத்தை தங்களின் மின்னஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வு வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் ஆகாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!