சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு பிப்.25-இல் நேர்காணல்

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் 25-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (www.trb.tn.nic.in) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதம் அவர்களது முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டிய ஆவணங்களின் பட்டியலையும் அறிவித்துள்ளது. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 25-ஆம் தேதி முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!