பொறியாளர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: உதவி பொறியாளர் பதவிக்கான எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்களின் சான்றிதழ்களை மின் வாரியம், இன்றும், நாளையும் சரிபார்க்க உள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், முதல் முறையாக, எழுத்து தேர்வு வாயிலாக, எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக, டிசம்பர், 30ல், அண்ணா பல்கலை வாயிலாக நடத்திய எழுத்து தேர்வு முடிவுகள், பிப்., 4 இரவு வெளியிடப்பட்டன.அதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் சான்றிதழ்களை, சென்னை, தலைமை அலுவலக வளாகத்தில், இன்றும், நாளையும், மின் வாரிய அதிகாரிகள் சரிபார்க்க உள்ளனர். இதற்காக, தகுதிவாய்ந்த தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!