கூட்டுறவு பட்டயப் பயிற்சியின்றி பணிபுரியும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இப்பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர பழைய 11ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது புதிய 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில், சங்கங்களில், வங்கிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சேர வயது வரம்பு இல்லை.
இப்பயிற்சி தொடர்ந்து 36 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மூன்று சான்றிதழ்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, கல்வித் தகுதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பணிச் சான்று ஆகியவற்றுடன் வரும் மார்ச் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு முதல்வர், மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையம், உதயாநகர், அரசு அலுவலர்கள் குடியிருப்பு, திருநெல்வேலி என்ற முகவரியிலோ அல்லது 0462-2552695 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.