“குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பணி: 28-க்குள் விண்ணப்பிக்கலாம்’  

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் காலியாக உள்ள உறுப்பினர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015ஆம் ஆண்டு இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைப்படி இம்மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள ஓர் உறுப்பினர் பணியிடத்துக்கு மதிப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.  இதற்கு இம்மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த சமூகப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர், குழந்தைகள் தொடர்பான உடல் நலம்,  கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவராகவோ, குழந்தை உளவியல்,  உளவியல்,  சட்டம், சமூகப் பணி,  சமூகவியல்,  மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அல்லது மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்திலிருந்து (h‌t‌t‌p‌s://‌t‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i.‌n‌i​c.‌i‌n) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இம்மாதம் 28ஆம் தேதி மாலை 5  மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,  அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகம்,  மேலப்பாளையம் அஞ்சல், திருநெல்வேலி- 627 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!