தமிழில் எழுத்த, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலை!

சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தின் வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், சமையலர், உதவியாளர் உடற்கல்வி ஆசிரியர், உளவியலாளர் போன்ற பணியிடங்களை தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 20

பணி: பாதுகாவலர் (Guard) – 12
சம்பளம்: மாதம் ரூ.12,000
வயதுவரம்பு: 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: சமையலர் (Cook) – 02

சம்பளம்: மாதம் ரூ.10,000
வயதுவமர்பு: 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

பணி: காவலர் (Watchman) – 02
சம்பளம்: மாதம் ரூ.10,000
வயதுவரம்பு: 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: உடனாள் (Helper) – 01
சம்பளம்: மாதம் ரூ.8,000
வயதுவரம்பு: 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: உடற்கல்வி ஆசிரியர் – 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: உடற்கல்வி ஆசிரியர் சான்று (உயர்நிலை) பெற்றிருக்க வேண்டும்.

பதவி: உளவியலாளர் – 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: இளங்கலை(ஹானஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: தொழிற்பயிற்றாசிரியர் (வாத்தியம்)  – 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இசைக்குழுவினர் பயன்படுத்தும் இசை மொழியினை அறிந்திருந்தல் வேண்டும். ஏதேனும் ஒரு வாத்தியக் கருவி வாசிப்பதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://vellore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் – 632001, வேலூர் மாவட்டம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/02/2019020792.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.02.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!