ஆவின் நிறுவனத்தில் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வேலை:

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 11

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: மூத்த தொழிற்சாலை உதவியாளர் –  04 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் ஐடிஐ  முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700

பணி: துணை மேலாளர் – 05 
தகுதி: பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பத் துறை பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,900

பணி: மேலாளர் – 02 
தகுதி: கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 37700 – 55,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers’ Union Ltd., No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023.

மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrkt050219.html  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.02.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!