ராணுவத்தில் டெக்னிக்கல் படிப்பு  

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவ அகாடமியில் (ஐ.எம்.ஏ.,) டெக்னிக்கல் கிராட்ஜூவேட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு:
டெக்னிக்கல் கிராட்ஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி., – 129). டேராடூனில் உள்ள ஐ.எம்.ஏ., கல்வி நிறுவனத்தில் ஓர் ஆண்டு பயிற்சி வழங்கப்படும்.

தகுதிகள்:
இந்திய குடியுரிமை பெற்றவராகவும், திருமணம் ஆகாதவராகவும் இருக்க வேண்டியது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
20 முதல் 27 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

இடங்கள்:
* சிவில் – 10
* ஆர்க்கிடெக்ச்சர் – 1
* மெக்கானிக்கல் – 4
* இ.இ.இ., – 5
* சி.எஸ்.இ., / ஐ.டி., – 6
* இ.சி.இ., – 7
* எலக்ட்ரானிக்ஸ் – 2
* மெட்டலார்ஜிகல் – 2
* இன்ஸ்ட்ருமெண்டேஷன் – 2
* மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மைக்ரோவேவ் – 1
என பொறியியலில் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த, மொத்தம் 40 மாணவர்களுக்கு இந்த டெக்னிக்கல் படிப்பிற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான தீதீதீ.டீணிடிணடிணஞீடிச்ணச்ணூட்தூ.ணடிஞி.டிண வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சேர்க்கை முறை: மொத்தம் இரண்டு நிலைகளில் மாணவர் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி, பார்வைத் திறன் மற்றும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 28

விபரங்களுக்கு: http://joinindianarmy.nic.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!