அழகப்பா பல்கலை. தொலைநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான தேர்வு வரும் டிச. 26 இல் நடைபெறவிருப்பதால், இதற்கு விண்ணப்பிக்கும் தேதி டிச. 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  அழகப்பா பல்கலை. தொலைதூரக்கல்வி மாணவர்கள் தேர்வுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் தேதி டிச. 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையம் வாயிலாக விண்ணபிக்க முடியாத மாணவர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வுப்பிரிவில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்றும், டிச. 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை நேரடியாக சமா்ப்பிக்க விரும்பும் மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்குநா் அலுவலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 04565 – 223122, 223123 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!