தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

தமிழக அரசில் காலியாகும் பணியிடங்களை தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக காலியாக இருக்கும் பிரின்சிபல்/அசிஸ்டென்ட் இன்ஜினியர் (இன்டஸ்ட்ரீஸ்) பிரிவில் உள்ள 41 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: பிரின்சிபல் பிரிவில் 9 இடங்களும், அஸிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 32 இடங்களும் சேர்த்து மொத்தம் 41 இடங்கள் உள்ளன.

வயது: 1.7.2018 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 24 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிரின்சிபல் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு மூன்று வருட காலத்திற்கு பேக்டரியில் பணிபுரிந்த அனுபவம் தேவைப்படும். அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவுக்கு விண்ணப்பிக்கவும் இன்ஜினியரிங் பட்டப் படிப்போடு ஆறு மாத கால பணியனுபவம் தேவைப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/- அல்லது ரூ.150/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விபரங் களை இணையதளத்தில் அறியவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரண்டு நிலைகளில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை, சேலம், நாகர் கோவில், மதுரை, தஞ்சை, காஞ்சிபுரம், கோவை, சிதம்பரம், காரைக்குடி, திருச்சி, வேலுார், புதுக்கோட்டை, திரு நெல்வேலி, ராமநாதபுரம், உதகமண்டலம் ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 டிச. 24

விபரங்களுக்குwww.tnpsc.gov.in/notifications/2018_35_Principal_ITI_AEI.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!