கண் சிகிச்சை உதவியாளர் பணி : பதிவு மூப்பு விபரம் வெளியீடு

சிவகங்கை: சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த ஆப்தல்மிக் (கண் சிகிச்சை) உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு விபரம் வெளியிடப்பட்டது.

இப்பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ கல்லுாரியில் கண் சிகிச்சை உதவியாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 2018 ஜூலை 1 ல் பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள், இதர வகுப்பினர் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.முன்னுரிமை பெற்றோர் பிரிவில் அனைத்து வகுப்பைச் சேர்ந்தோர் 2018 நவ., 30 வரை, முன்னுரிமைற்ற பிரிவில் ஆதிதிராவிடர் 2013 அக்., 11 வரை, மிகவும் பிற்பட்டோர் 2012 நவ., 30 வரை, பிற்பட்டோர் 2011 மே 12 வரை, பொதுப்பிரிவினர் 2013 பிப்., 28 வரை பரிந்துரை செய்யப்படுவர்.விரும்புவோர் கல்வி சான்று, ரேஷன்கார்டு, வேலைவாய்ப்பு அட்டை, ஆதார் அட்டையுடன் இன்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை விபரத்தை அறிந்து கொள்ளலாம் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!