நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை:

டிச. 28 வரை விண்ணப்பிக்கலாம்
ஆடை வடிவமைப்புக்கான தேசிய கல்விக்கழகத்தின் (நிஃப்ட்) மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 28 வரை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார்.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தக் கல்வி நிறுவன வளாகம், ராஜீவ் காந்தி சாலை அருகே, சென்னை தரமணியில் உள்ளது.
இந்நிறுவனம், பி.டி.இ.எஸ்., பி.எஃப்.டெக் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளுக்கும் எம்.டி.இ.எஸ். எம்.எஃப்.எம், எம்.எஃப்.டெக் ஆகிய பட்டமேற்படிப்புகளுக்கும் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 28, 2018 வரை www.nift.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே பயின்ற மாணவர்கள் சர்வதேச ஜவுளி நிறுவனங்களில் நிஃப்ட் தூதர்களாக பெருமை சேர்ப்பதாகவும் இவர்களின் தொலைநோக்குடனான ஆடை வடிவமைப்பு, உலகப்புகழ் பெற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!