சிவில் சர்வீசஸ் தேர்வு: ‘ரிசல்ட்’ அறிவிப்பு

சென்னை, இந்திய அரசு நிர்வாக பணிகளான, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.ஆர்.எஸ்., உள்பட, 24 பதவிகளில், 782 காலியிடங்களை நிரப்ப, முதல்நிலை தேர்வு, இந்த ஆண்டு, ஜூன், 3ல் நடந்தது. இந்த தேர்வில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், ஜூலையில் வெளியிடப்பட்டன. இதில், 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.பிரதான தேர்வு, செப்., 28 முதல், அக்., 7 வரை நடத்தப்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. இதற்கான முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், 1,994 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிப்., 4 முதல் நேர்முக தேர்வு நடக்கும். தேர்வானவர்களுக்கு, ஜன., 8 முதல்,www.upsc.gov.in என்ற, இணையதளத்தில் அழைப்பு கடிதம் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!