’10 ஆயிரம் பேருக்கு வேலை’

சத்தியமங்கலம், டஈரோடுமாவட்டம், கோபியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று கூறியதாவது:ஈரோடு மாவட்டம், கொளப்பலுாரில், ஜவுளி தொழில் நுட்ப பூங்காவுக்கு, 2019ம் ஆண்டு, ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படுகிறது. முதலாமாண்டு, 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளோம். இதேபோல் அடுத்த மூன்று ஆண்டுகளில், 7,500 பேருக்கு வேலை வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு போல், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சீருடை மாற்றப்படும்.பெற்றோர் விரும்பினால், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும். தமிழகம் முழுவதும், ௩,௦௦௦ பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க டென்டர் விடப்பட்டு, தற்போது பணி முடியும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வரும், ஜன.,௭ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன்பிறகு பணி தொடங்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ளும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!