ஐ.ஐ.பி.எஸ்., மாணவர் சேர்க்கை

 இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் பாபுலேஷன் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் பல்வேறு நிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
 
படிப்புகள்:
எம்.ஏ.,/எம்.எஸ்சி., இன் பாபுலேஷன் ஸ்டடீஸ்
எம்.எஸ்சி., இன் பயோ-ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி
மாஸ்டர் ஆப் பாபுலேஷன் ஸ்டடீஸ்
எம்.பில், இன் பாபுலேஷன் ஸ்டடீஸ்/ பயோ-ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி
பிஎச்.டி., இன் பாபுலேஷன் ஸ்டடீஸ்/ பயோ-ஸ்டடிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி
போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப்
தகுதிகள்:
முதுநிலை படிப்பில் சேர்க்கை பெற இளநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். எம்.பில்., / பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை ஐ.ஐ.பி.எஸ்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 4
விபரங்களுக்கு: http://iipsindia.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!