பாரஸ்ட்ரி படிப்பு  

மத்திய அரசின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட் – கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
 
படிப்புகள்:
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் பாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எப்.எம்.,)
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் சஸ்டெய்னபிலிட்டி மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எஸ்.எம்.,)
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் விலக்கு உண்டு.  இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ‘கேட்’ அல்லது ’எக்ஸாட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை ஐ.ஐ.எப்.எம்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம் அல்லது விண்ணப்பத்தை நேரடியாக ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
சேர்க்கை முறை: தகுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்படும். இதற்கான தேர்வு மையங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 20
விபரங்களுக்கு: http://iifm.ac.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!