131 ஏ.இ.,க்கள் நியமனம்

சென்னை பொதுப்பணித் துறையில், 131 உதவிப் பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும், நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டடங்கள் பிரிவில், 91 சிவில் உதவிப் பொறியாளர், 40 மின் உதவிப் பொறியாளர், பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றை நிரப்புவதற்காக, அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாக, 131 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் பழனிசாமி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மை செயலர் பிரபாகர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!