பிஎச்.டி., படிப்பு

உயிரியல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக நோய் எதிர்ப்பு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, புதுடில்லியில் இயங்கி வரும் தன்னாட்சி கல்வி நிறுவனமான, நேஷனல் ‘இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜி’ (என்.ஐ.ஐ.,)-ல் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பிரிவுகள்: பிஎச்.டி., (இம்யூனாலஜி, இன்பக்‌ஷியஸ் அண்ட் குரோனிக் பயாலஜி, மாலிகுலார் அண்ட் செல்லுலார் பயாலஜி, கெமிக்கல் பயாலஜி, ஸ்ட்ரக்ச்சுரல் பயாலாஜி மற்றும் காம்புடேஷனல் பயாலஜி)
தகுதிகள்: உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற அறிவியல் துறை சார்ந்த பிரிவில் எம்.எஸ்சி., / எம்.டெக்.,  எம்.பி.பி.எஸ்., எம்.வி.எஸ்சி., எம்.பார்ம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டத்தை 60 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதம் விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: என்.ஐ.ஐ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
சேர்க்கை முறை: நாட்டின் பல்வேறு மையங்களில் கணினி வழி நுழைவுத் தேர்வு வாயிலாக, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் அல்லது ‘ஜாயிண்ட் கிராட்ஜூவேட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் இன் பயாலஜி அண்ட் இன்டர் டிசிப்ளினரி லைப் சயின்சஸ்’ (ஜே.ஜி.இ.இ.பி.ஐ.எல்.எஸ்., ) தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 27
தேர்வு நாள்: பிப்ரவரி 24
நேர்முகத் தேர்வு: ஜூன் 13 முதல் 15 வரை
விபரங்களுக்கு: www.nii.res.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!