ஐ.ஐ.எம்., அட்மிஷன்  

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.,)- பெங்களூரு கல்வி நிறுவனத்தில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
 போஸ்ட் கிராட்ஜூவேட் புரோகிராம் இன் எண்டர்பிரைஸ் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.பி.இ.எம்.,)
 போஸ்ட் கிராட்ஜூவேட் புரோகிராம் இன் பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.பி.பி.எம்.,)
 பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் (எப்.பி.எம்.,)
தகுதிகள்: முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இளநிலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டியது அவசியம். கேட் / ஜி.ஆர்.இ., / ஜிமேட் அல்லது ஐ.ஐ.எம்.பி., தேர்வை எழுதியிருக்க வேண்டியது அவசியம்.
ஆராய்ச்சி படிப்பிற்கு, முதுநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது சி.ஏ., / ஐ.சி.டபிள்யூ.ஏ., / ஏ.சி.எஸ்., படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை, ஐ.ஐ.எம்., பெங்களூரு கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.
சேர்க்கை முறை: தகுதி தேர்வுகளில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
பி.ஜி.பி.இ.எம்., மற்றும் பி.ஜி.பி.பி.எம்., – ஜனவரி 16
எப்.பி.எம்., – ஜனவரி 14
விபரங்களுக்கு: www.iimb.ac.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!