வேளாண்மையில் மேலாண்மை படிப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்ச்சுரல் மார்கெட்டிங்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட்)
தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டத்தை 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை விலக்கு உண்டு. மேலும் மத்திய அரசின் கேட் அல்லது சிமேட் தகுதி தேர்வினை எழுதியிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழி நேரடியாக ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியிலும் அனுப்பலாம்.
சேர்க்கை முறை: மேலாண்மை தகுதி தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் தரவரிசையில் பிடித்திருக்கும் இடம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 28
விபரங்களுக்கு: www.ccsniam.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!