மாணவிகளுக்கான ‘வீடெக்’ ஸ்காலர்ஷிப்

அமெரிக்காவில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆப் இண்டர்நேஷனல் எஜூகேஷன்’ (ஐ.ஐ.இ.,) கல்வி நிறுவனத்தால் இந்திய பெண் தொழில்நுட்ப கல்வி மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டமே ‘வீடெக் கோல்ட்மான் சாக்ஸ் குளோபல் ஸ்காலர்ஷிப் அண்ட் மென்டார்ஷிப் புரோகிராம்’
கோல்ட்மென் சாக்ஸ் அமைப்பு, இந்திய தொழில்நுட்ப துறை மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கோடு அமெரிக்காவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.இ., உடன் இணைந்து வழங்கும் உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதல் திட்டம்தான் ‘வுமென் என்ஹேன்சிங் டெக்னாலஜி’ எனப்படும் வீடெக் ஸ்காலஷிப். இந்தியாவில் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப பட்டப்படிப்பைப் பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
பெண்களுக்கான இந்த பிரத்யேக உதவித்தொகை திட்டத்தில் பங்கெடுக்க, விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். ஆங்கில மொழி புலமை அவசியம். தற்போது இளநிலை தொழில்நுட்ப படிப்பில் இரண்டாம் அல்லது மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியாக இருக்க வேண்டும். ஐ.சி.டி., தொடர்பான பாடப்பிரிவினை சேர்ந்தவராகவும் இருத்தல் அவசியம்.
உதவித்தொகை எண்ணிக்கை: 45
பயன்கள்:
தேர்வு செய்யப்பட்ட 45 மாணவிகளுக்கு 6 மாத ‘விர்ச்சுவல் மென்டார்ஷிப்’  முறையில் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான வழிகாட்டி வகுப்புகள் நடத்தப்படும். இவர்களுள் 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குக் கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகையாக 1500 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்கள்:
பனஸ்தலி வித்யபித், ராஜஸ்தான்
இந்திராகாந்தி டெல்லி டெக்னிக்கல் யூனிவர்சிட்டி பார் வுமன், டெல்லி
கம்மின்ஸ் காலெஜ் ஆப் இன்ஜினியரிங் பார் வுமன், புனே
பி.இ.எஸ்.ஐ.டி., பெங்களூரு
ராஷ்ட்ரிய வித்யாலயா காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பெங்களூரு
ஷிவ் நாடார் யூனிவர்சிட்டி, டெல்லி
ஐ.ஐ.டி., ஹைதிராபாத்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த உதவித்தொகை திட்டத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளத்தின் மூலம் மட்டுமே மாணவிகள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு முறை:
மாணவிகளின் மதிப்பெண் சதவீதமான ஜி.பி.ஏ., அடிப்படையிலேயே வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. கூடுதலாக படிப்பை தவிர சமூக சேவை, தன்னார்வ சேவைகள், போட்டிகள், கிளப் மற்றும் அசோசியேஷன் ஆகியவற்றில் பங்களிப்புகளும் கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 31
விபரங்களுக்கு: www.iie.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!