பிஎச்.டி., கணிதம் மாணவர்களுக்கான உதவித்தொகை

சென்னை பல்கலைக்கழகமும், ராமானுஜன் இன்ஸ்டிடியூட் பார் அட்வான்ஸ்டு ஸ்டடி இன் மேதமெடிக்ஸ் (ஆர்.ஐ.ஏ.எஸ்.எம்) என்ற கல்வி நிறுவனமும் இணைந்து அறிவியல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவித்துள்ளன.

யூ.ஜி.சி – பி.எஸ்.ஆர் திட்டத்தின் படி 5 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
என்னென்ன பிரிவுகள்:
யூ.ஜி.சி – பி.எஸ்.ஆர் நடத்தும் பெல்லோவ்ஷிப் திட்டத்தில் பயோ-சயின்ஸ், அக்ரிகல்சுரல் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் சயின்ஸ் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:
1. மாணவர்கள் சென்னை பல்கலையின் கீழ் இயங்கும் ராமனுஜம் கல்வி நிலையத்தில் பிஎச்.டி. கணிதம் பயில பதிவு செய்திருக்க வேண்டும்.
2. ராமனுஜம் கல்வி நிலையத்தில் பிஎச்.டி. கணிதம் பயில பதிவு செய்திருக்கும் மாணவர்கள் தங்களது சுய விவரக் குறிப்பை (பயோ-டேட்டா)  இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.
3. பிஎச்.டி. கணிதம் பயில பதிவு செய்யும் மற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள், சென்னை பல்கலைக் கழக பதிவாளர் மூலமாக பெறப்படும்.

மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணையதளத்தை காணவும்.

 

Scholarship : பிஎச்.டி., கணிதம் மாணவர்களுக்கான உதவித்தொகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!