ஐ.எப்.ஐ.எம். பிசினஸ் ஸ்கூல் ஸ்காலர்ஷிப் திட்டம்

பெங்களூரில்  உள்ள ஐஎப்ஐஎம் பிசினஸ் ஸ்கூல், தகுதிபெறும் பொது நுழைவுத் தேர்வு (CAT) மாணவர்கள் ஐஎப்ஐஎம்-ல் சேர ஸ்காலர்ஷிப் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான மாணவர்களுக்கு மொத்த பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் கழிக்கப்படும். பொது நுழைவுத் தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களும் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறத் தகுதிபடைத்தவர்களாவர்.

ஐஎப்ஐஎம்-ல் இரண்டாண்டு முழுநேர பிஜடிஎம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போதே இந்த ஸ்காலர்ஷிப்பை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

1. போஸ்ட்கிராஜுவேட் டிப்ளமா இன் மேனஜ்மென்ட் (பிஜடிஎம்)
2. போஸ்ட்கிராஜுவேட் டிப்ளமா இன் மேனஜ்மென்ட் டூ இன்டர்நேஷனல் பிசினஸ் (பிஜடிஎம்-ஐபி) மற்றும்
3. போஸ்ட்கிராஜுவேட் டிப்ளமா இன் மேனஜ்மென்ட் டூ பினான்ஸ் (பிஜடிஎம்-பினான்ஸ்)

இந்தப் படிப்புகள் ஏஐசிடிஇ, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சம், என்பிஏ மற்றும் ஏஐயு ஆகியவற்றின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

குழு விவாதம் மற்றும் தனிப்பட்ட நேர்க்காணல் ஆகியவற்றின் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் இந்த ஸ்காலர்ஷிப்புக்கான பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள். கூடுதல் கல்விச் செயல்பாடுகள் அல்லது விளையாட்டு ஆகியவற்றில் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு இவை கூடுதல் தகுதியாக கருதப்படும்.

இந்த ஸ்காலர்ஷிப்பை பெற விரும்பும் மாணவர்கள் www.ifimbschool.com  என்ற இணையதளத்திலிருந்து இணையவழியில் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மாணவர்கள் கூடுதல் தகவலகளை தெரிந்து கொள்ள 080-41432800 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஐஎப்ஐஎம் பிசினஸ் ஸ்கூல் கடந்த 15 ஆண்டுகளாக தரமான நிர்வாகக் கல்வியை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் தனது கல்வி மாதிரி அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில், தொழில்துறையினர், கல்வியாளர்கள் கவுன்சில் மற்றும் வாரியம் ஆகியோரிடமிருந்து கல்வித்திட்டங்களை பெற்று அளிக்கிறது. ஐஎப்ஐஎம்மில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உலகத்தரமான சிறந்த கல்வியை அளித்து வருகின்றனர். இங்கு பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழில்துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனம் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு  முழுமையான மேம்பாட்டினை அளிக்க நோக்கம் கொண்டிருப்பதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளை அளித்து, மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடல்நலத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் தனிநபர் ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களில் தீவிரமாக பங்கேற்க  ஊக்கமளிக்கிறது.

Scholarship : ஐ.எப்.ஐ.எம். பிசினஸ் ஸ்கூல் ஸ்காலர்ஷிப் திட்டம்
Course :
Provider Address :
Description :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!